👉 உங்களுக்கென சொந்தமாக ஓர் இணையத்தளம் வேண்டுமா ! முதன் முறையாக LKR_4500/= இருந்து ... ( மற்றும் உங்கள் வசதிக்கேற்றவாறு மிக குறைந்த விலையில் செய்து தர நாங்கள் தயாராக உள்ளோம் உடன் தொடர்புகளுக்கு ... +94 77 82 92 016 🌸🌸🌸.....
SF NEWS | 10:37 AM |

தமிழக அரசின் விருதுப் பட்டியலில் முன்னணி நடிகர்கள் இல்லை

தமிழக அரசு அறிவித்துள்ள விருது பட்டியலில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு விருது கிடைக்கவில்லை, மாறாக புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு விருது கிடைக்கவில்லை.
தமிழக அரசு ஆண்டு தோறும் சிறந்த படம், நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு விருதுகளை வழங்கி வருகின்றது.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை 6 ஆண்டுகளுக்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2009 இல் வெளியான ‘பசங்க’ படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் மைனா, வாகை சூடவா, வழக்கு எண் 18/9, ராமானுஜன், குற்றம் கடிதல் ஆகிய படங்களுக்கும் காலம் கடந்து விருதுகள் கிடைத்துள்ளன.
2009 இல் சிறந்த நடிகராக கரண், 2010 இல் விக்ரம், 2011 இல் விமல், 2012 இல் ஜீவா, 2013 இல் ஆர்யா, 2014 இல் சித்தார்த் ஆகியோர் சிறந்த நடிகர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் பட்டியலில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் ஒருவர் கூட இடம்பெறாதது அவர்களது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மேலும், முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் சிறந்த பாடலாசிரியர், சிறந்த துணை நடிகை, குணச்சித்திர நடிகை உள்ளிட்ட மற்ற விருதுகளுக்குக் கூட தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவடைந்துள்ள 2015, 2016 ஆகிய 2 ஆண்டுகளில் வெளியான படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்படவில்லை.
2017 ஆம் ஆண்டு திரைக்கு வரும் படங்கள் டிசம்பர் வரை கணக்கிடப்படும். எனவே, எதிர்வரும் ஜனவரியில் இந்த 3 ஆண்டுகளில் வெளியான படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் விருதுப் பட்டியலில் முன்னணி நடிகர்கள் இல்லை தமிழக அரசின் விருதுப் பட்டியலில் முன்னணி நடிகர்கள் இல்லை Reviewed by SF NEWS on 10:37 AM Rating: 5

No comments:

SF NEWS 🌸