👉 உங்களுக்கென சொந்தமாக ஓர் இணையத்தளம் வேண்டுமா ! முதன் முறையாக LKR_4500/= இருந்து ... ( மற்றும் உங்கள் வசதிக்கேற்றவாறு மிக குறைந்த விலையில் செய்து தர நாங்கள் தயாராக உள்ளோம் உடன் தொடர்புகளுக்கு ... +94 77 82 92 016 🌸🌸🌸.....
SF NEWS | 10:40 AM |

ரஷ்யாவில் எதிர்க்கட்சித் தலைவரை சுட்டுக்கொன்றவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ரஷ்யாவில் எதிர்க்கட்சித் தலைவரை சுட்டுக்கொன்றவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் புதின் போ போரிஸ் நெம்த்சோவ் (32).
இவர் மொஸ்கோவில் உள்ள கிரம்ளின் மாளிகை (அதிபர் மாளிகை) அருகே தனது காதலியுடன் நடந்து சென்ற போது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 27 ஆம் திகதி நள்ளிரவில் நடந்தது.
சுட்டுக்கொல்லப்பட்ட நெம்த்சோவ், முன்னாள் பிரதமர் போரிஸ் யெலட்சின் அரசில் துணை பிரதமராக பதவி வகித்தவர்.
அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக ஊழல் புகார் கூறி போராட்டம் நடத்தி வந்தார். எனவே, இக்கொலையில் புதினுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில், இக்கொலை வழக்கில் செசன்யாவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி ‌ஷயுர்ததாயேவ், செசன்யா இராணுவ அதிகாரியின் வாகன சாரதி ருஸ்லான் முகுதியேல் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நெம்த்சோவை சுட்டுக்கொன்றமைக்காக ‌ஷயுர்ததாயேவுக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.
இவர் தவிர, ருஸ்லான் முகுதியேவ் உள்ளிட்ட 4 பேருக்கு 11 முதல் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் எதிர்க்கட்சித் தலைவரை சுட்டுக்கொன்றவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை ரஷ்யாவில் எதிர்க்கட்சித் தலைவரை சுட்டுக்கொன்றவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை Reviewed by SF NEWS on 10:40 AM Rating: 5

No comments:

SF NEWS 🌸