👉 உங்களுக்கென சொந்தமாக ஓர் இணையத்தளம் வேண்டுமா ! முதன் முறையாக LKR_4500/= இருந்து ... ( மற்றும் உங்கள் வசதிக்கேற்றவாறு மிக குறைந்த விலையில் செய்து தர நாங்கள் தயாராக உள்ளோம் உடன் தொடர்புகளுக்கு ... +94 77 82 92 016 🌸🌸🌸.....
SF NEWS | 10:36 AM |

வௌ்ளை வேனில் 11 இளைஞர்கள் கடத்தல்: கொமடோர் D.K.P. தசநாயக்கவிற்கு விளக்கமறியல்

2008 ஆம் ஆண்டில் வௌ்ளை வேன் மூலம் கொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமற்போகச் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நடவடிக்கை பிரதி பணிப்பாளருமான கொமடோர் D.K.P. தசநாயக்க எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான கொமடோர் D.K.P. தசநாயக்க, வெலிசறை கடற்படை வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, அவரை சிறைச்சாலைகள் வைத்தியசாலைக்கு மாற்றுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, அவர் வெளிநாடு செல்வதற்காக முன்வைத்திருந்த கோரிக்கையையும் நீதவான் நிராகரித்துள்ளார்.
கொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமற்போகச் செய்தமை தொடர்பான வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, D.K.P. தசநாயக்கவை கைது செய்ய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தனர்.
இவ்வாறானதொரு குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபரைக் கைது செய்வதற்கு நீதிமன்றத்தின் உத்தரவு அவசியமில்லையென நீதவான் தெரிவித்ததையடுத்து, அவரைக் கைது செய்தனர்.
கடற்படையினர் சிலரால் 11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொழும்பு சைத்ய வீதியில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் திருகோணமலையில் உள்ள முகாமொன்றின் நிலக்கீழ் அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக வழக்கு விசாரணைகளில் கண்டறியப்பட்டது.
சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில் கடற்படையின் புலனாய்வுப் பிரிவிற்கு D.K.P. தசநாயக்க பொறுப்பாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
வௌ்ளை வேனில் 11 இளைஞர்கள் கடத்தல்: கொமடோர் D.K.P. தசநாயக்கவிற்கு விளக்கமறியல் வௌ்ளை வேனில் 11 இளைஞர்கள் கடத்தல்: கொமடோர் D.K.P. தசநாயக்கவிற்கு விளக்கமறியல் Reviewed by SF NEWS on 10:36 AM Rating: 5

No comments:

SF NEWS 🌸