👉 உங்களுக்கென சொந்தமாக ஓர் இணையத்தளம் வேண்டுமா ! முதன் முறையாக LKR_4500/= இருந்து ... ( மற்றும் உங்கள் வசதிக்கேற்றவாறு மிக குறைந்த விலையில் செய்து தர நாங்கள் தயாராக உள்ளோம் உடன் தொடர்புகளுக்கு ... +94 77 82 92 016 🌸🌸🌸.....
SF NEWS | 12:40 AM |

பூமியை போன்று மனிதர்கள் வாழக்கூடிய மேலும் 10 கிரகங்கள் கண்டுபிடிப்பு

பூமி போன்று மனிதர்கள் வாழக்கூடிய 10 கிரகங்களை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.
இந்தக் கிரகங்கள் பூமியை போன்றே தட்பவெப்ப நிலையையும், பூமியின் அளவையும் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் 219 கிரகங்களை உயிரினங்கள் வாழத்தக்க பட்டியலில் சேர்த்துள்ளனர்.
நாசாவின் கெப்ளர் வான்வெளி தொலைநோக்கி மூலம் நடைபெற்று வந்த ஆராய்ச்சிகள் மூலம் புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்துள்ளன.
2009 ஆம் ஆண்டில் கெப்ளர் ஆய்வினைத் துவங்கி பிரபஞ்சத்தில் பூமி மட்டும் தனித்துள்ளதா இல்லை அது போன்ற கிரகங்கள் உள்ளனவா என்ற ஆராய்ச்சி துவங்கப்பட்டது.
விஞ்ஞானிகள் இதுவரை 4,034 கிரகங்களை கண்டறிந்துள்ளனர், இதில் பூமி போன்றே உருவத்திலும், தட்பவெப்ப நிலையில் சுமார் 50 கிரகங்கள் வரை இருப்பதாக தெரிகிறது.
நமது சூரிய குடும்பத்தினையும் கடந்து அமைந்துள்ள விண்மீன் கூட்டங்களில் சுமார் 3,500 கிரகங்கள் பூமியைப் போல இருப்பதற்கு வாய்ப்புள்ளவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

பூமியை போன்று மனிதர்கள் வாழக்கூடிய மேலும் 10 கிரகங்கள் கண்டுபிடிப்பு பூமியை போன்று மனிதர்கள் வாழக்கூடிய மேலும் 10 கிரகங்கள் கண்டுபிடிப்பு Reviewed by SF NEWS on 12:40 AM Rating: 5

No comments:

SF NEWS 🌸