👉 உங்களுக்கென சொந்தமாக ஓர் இணையத்தளம் வேண்டுமா ! முதன் முறையாக LKR_4500/= இருந்து ... ( மற்றும் உங்கள் வசதிக்கேற்றவாறு மிக குறைந்த விலையில் செய்து தர நாங்கள் தயாராக உள்ளோம் உடன் தொடர்புகளுக்கு ... +94 77 82 92 016 🌸🌸🌸.....
SF NEWS | 11:04 AM |

வெள்ளவத்தையில் கட்டிடம் சரிந்து வீழ்ந்தது: ஒருவர் உயிரிழப்பு 25 பேர் காயம்

கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
வௌ்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு அருகில் இருந்த கட்டிடம் ஒன்றே இன்று காலை 10.30 மணியளவில் சரிந்து வீழ்ந்தது.
இராணுவம், விமானப்படை, பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் ஆகியோர் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
அனர்த்தம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சிலவும் இதன்போது சேதமடைந்துள்ளன.
அனர்த்தத்தில் காயமடைந்த 14 பேர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் கவலைக்கிடமான நிலையில் எவரும் இல்லை என வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
அனர்த்தத்தில் காயமடைந்த மேலும் 9 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
கட்டிட இடிபாட்டில் சிக்கியிருப்போரை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


வெள்ளவத்தையில் கட்டிடம் சரிந்து வீழ்ந்தது: ஒருவர் உயிரிழப்பு 25 பேர் காயம் வெள்ளவத்தையில் கட்டிடம் சரிந்து வீழ்ந்தது: ஒருவர் உயிரிழப்பு 25 பேர் காயம் Reviewed by SF NEWS on 11:04 AM Rating: 5

No comments:

SF NEWS 🌸