👉 உங்களுக்கென சொந்தமாக ஓர் இணையத்தளம் வேண்டுமா ! முதன் முறையாக LKR_4500/= இருந்து ... ( மற்றும் உங்கள் வசதிக்கேற்றவாறு மிக குறைந்த விலையில் செய்து தர நாங்கள் தயாராக உள்ளோம் உடன் தொடர்புகளுக்கு ... +94 77 82 92 016 🌸🌸🌸.....
SF NEWS | 11:02 AM |

கொழும்பில் பெய்த கடும் மழையால் வீதிகள் பல நீரில் மூழ்கின

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை வலுவடைந்துள்ளமையினால் இன்று சில பகுதிகளில் கடும் மழை பெய்துள்ளது.
கொழும்பிலும் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ததால் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இன்று காலை 8.30 மணியில் இருந்து 2.30 மணி வரை கொழும்பில் 78.8 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.
இதன் காரணமாக, கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க பகுதிகளில் உள்ள பல வீதிகளில் நீர் நிரம்பிக் காணப்பட்டதுடன், வாகன நெரிசலும் ஏற்பட்டது.
இன்று இரவு மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.
இதேவேளை, புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக திருகோணமலை வரையும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையும் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதனால் மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் குறிப்பிட்டது.


SFNEWS💦
கொழும்பில் பெய்த கடும் மழையால் வீதிகள் பல நீரில் மூழ்கின  கொழும்பில் பெய்த கடும் மழையால் வீதிகள் பல நீரில் மூழ்கின Reviewed by SF NEWS on 11:02 AM Rating: 5

No comments:

SF NEWS 🌸