👉 உங்களுக்கென சொந்தமாக ஓர் இணையத்தளம் வேண்டுமா ! முதன் முறையாக LKR_4500/= இருந்து ... ( மற்றும் உங்கள் வசதிக்கேற்றவாறு மிக குறைந்த விலையில் செய்து தர நாங்கள் தயாராக உள்ளோம் உடன் தொடர்புகளுக்கு ... +94 77 82 92 016 🌸🌸🌸.....
SF NEWS | 10:37 AM |

கிளிநொச்சியில் வாள்வெட்டு ஐந்து பிள்ளைகளின் தந்தை பலி தாய் படுகாயம்! (VIDEO)

கிளிநொச்சி, கனகபுரம் வீதியில் தனியார் உணவு விடுதி ஒன்றை நடத்தி வந்தவர்கள் மீது இன்று 16.05.2017 மதியம் ஒரு மணியளவில் நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த உணவு விடுதியை குத்தகைக்கு எடுத்து நடத்திவந்த தம்பதியர் மீதே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மனைவி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உணவு விடுதியின் குத்தகைக்காலம் முடிவடைந்த நிலையில், குறித்த தம்பதியர் உணவு விடுதியை ஒப்படைத்துவிட்டு, உணவு விடுதி  உரிமையாளரிடம் முற்பணத்தை கோரியுள்ளனர்.

அதன்போது இரு தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், உரிமையாளர் மேற்படி தம்பதியர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

கிளிநொச்சியில் வாள்வெட்டு ஐந்து பிள்ளைகளின் தந்தை பலி தாய் படுகாயம்! (VIDEO) கிளிநொச்சியில் வாள்வெட்டு  ஐந்து பிள்ளைகளின் தந்தை பலி  தாய் படுகாயம்! (VIDEO) Reviewed by SF NEWS on 10:37 AM Rating: 5

No comments:

SF NEWS 🌸