👉 உங்களுக்கென சொந்தமாக ஓர் இணையத்தளம் வேண்டுமா ! முதன் முறையாக LKR_4500/= இருந்து ... ( மற்றும் உங்கள் வசதிக்கேற்றவாறு மிக குறைந்த விலையில் செய்து தர நாங்கள் தயாராக உள்ளோம் உடன் தொடர்புகளுக்கு ... +94 77 82 92 016 🌸🌸🌸.....
SF NEWS | 1:02 AM |

திறைசேரி முறிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு

திறைசேரி முறிகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 27 ஆம் திகதி வரை ஆணைக்குழுவின் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் சுமதிபால உடுகமசூரிய குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆணைக்குழுவின் காலத்தை நீடித்துள்ளதாக அதன் செயலாளர் கூறினார்.
இதற்கான ஆவணம் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர், இதுவரை 14 பேரிடம் ஆணைக்குழு சாட்சியங்களை பதிவுசெய்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், மத்திய வங்கியின் உள்ளக கணக்காய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் கல்யாணி குணதிலக்க, சாட்சியமளிப்பதற்காக இன்று (25) ஆணைக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளார்.

திறைசேரி முறிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு திறைசேரி முறிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு Reviewed by SF NEWS on 1:02 AM Rating: 5

No comments:

SF NEWS 🌸