👉 உங்களுக்கென சொந்தமாக ஓர் இணையத்தளம் வேண்டுமா ! முதன் முறையாக LKR_4500/= இருந்து ... ( மற்றும் உங்கள் வசதிக்கேற்றவாறு மிக குறைந்த விலையில் செய்து தர நாங்கள் தயாராக உள்ளோம் உடன் தொடர்புகளுக்கு ... +94 77 82 92 016 🌸🌸🌸.....
SF NEWS | 12:58 AM |

ஜெயலலிதாவின் பங்களாவில் கொள்ளை: காவலாளி கொலை செய்யப்பட்டு மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளார்

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த ஆவணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான 850 ஏக்கர் தேயிலைத் தோட்டம் உள்ளது.
16 நுழைவாயில்கள் கொண்ட இந்த எஸ்டேட்டில் ஜெயலலிதா வழக்கமாக 9 ஆவது எண் நுழைவாயிலையே பயன்படுத்தி வந்தார். அதன் அருகிலுள்ள 10 ஆவது எண் நுழைவாயிலில் தான் இந்தக் கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று அதிகாலை வேளையில் இரண்டு கார்களில் சென்ற 10 பேர் கொண்ட முகமூடியணிந்த கும்பல், எஸ்டேட்டின் 10 ஆவது நுழைவாயிலில் இருந்த ஓம் பகதூர் என்ற காவலாளியைத் தாக்கி, வாயைக் கறுப்புத் துணியால் கட்டி, மயக்கமுறச் செய்துள்ளதுடன், அவரைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலை கயிற்றால் கட்டி மரத்தில் தொங்கவிட்டுள்ளனர்.
மற்றுமொரு காவலாளியைத் தாக்கி, அவரைக் கத்தியால் வெட்டியுள்ளனர். அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த எஸ்டேட்டில் உள்ள பங்களாவின் ஓர் அறையில் இருந்த பணம், தங்கம், வைர நகைகள் மற்றும் ஆவணங்களைக் கொள்ளையர்கள் கொண்டு சென்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த நேரத்தில் எஸ்டேட்டில் மின் இணைப்பு இல்லாமல் இருந்திருக்கிறது. கொள்ளையர்கள் தான் மின் இணைப்பைத் துண்டித்து விட்டு, கொள்ளையில் ஈடுபட்டிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், பங்களா நிர்வாகத்தினர் அண்மையில் கண்காணிப்புக் கெமராப் பதிவுகளை நிறுத்தியுள்ளமையும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஜெயலலிதாவின் பங்களாவில் கொள்ளை: காவலாளி கொலை செய்யப்பட்டு மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளார் ஜெயலலிதாவின் பங்களாவில் கொள்ளை: காவலாளி கொலை செய்யப்பட்டு மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளார் Reviewed by SF NEWS on 12:58 AM Rating: 5

No comments:

SF NEWS 🌸