👉 உங்களுக்கென சொந்தமாக ஓர் இணையத்தளம் வேண்டுமா ! முதன் முறையாக LKR_4500/= இருந்து ... ( மற்றும் உங்கள் வசதிக்கேற்றவாறு மிக குறைந்த விலையில் செய்து தர நாங்கள் தயாராக உள்ளோம் உடன் தொடர்புகளுக்கு ... +94 77 82 92 016 🌸🌸🌸.....
SF NEWS | 3:04 AM |

வியாழன் கிரகத்தில் புயல்: ஆராய்கிறது ஜுனோ விண்கலம்


வியாழன் கிரகத்தின் மிகவும் அறியப்பட்ட `தி கிரேட் ரெட் ஸ்பாட்` என்ற பகுதியின் அமைப்பு மற்றும் தோற்றத்தை பற்றி ஆராய்வதற்காக , அதன் மேற்பகுதியில் நாசாவின் ஆளில்லா விண்கலம் ஒன்று பறந்து வருகிறது.
`ஜுனோ` என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆளில்லா ஆய்வு விண்கலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவான பெரிய புயலான அந்த பெரும் சிவப்புப் பகுதி குறித்த நெருக்கமான தரவுகளை சேகரிப்பதற்காக வியாழனுக்கு மேல் 9,000 கிலோ மீட்டர் உயரத்தில் பயணித்து வருகிறது.
அப்பகுதியில் மேகங்களின் கட்டமைப்பு மற்றும் அவற்றின் கீழே என்ன இருக்கிறது என்பது குறித்து சோதிக்கவும், இந்தப் புயல் வளிமண்டலத்தின் ஆழத்தில் எப்படி இருக்கிறது என்பதை அறிய ஆராய்ச்சியாளர்கள் விரும்புகின்றனர்.
ஜுனோ விண்கலம் வியாழன் கிரகத்தை வந்தடைந்து 12 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்த்ததை விட, இந்த கிரகத்தின் காந்தப்புலம் அதிக பலத்துடன் இருப்பதையும் ஏற்கனவே இந்த விண்கலம் கண்டறிந்துள்ளது.
வியாழன் கிரகத்தில் புயல்: ஆராய்கிறது ஜுனோ விண்கலம் வியாழன் கிரகத்தில் புயல்: ஆராய்கிறது ஜுனோ விண்கலம் Reviewed by SF NEWS on 3:04 AM Rating: 5

No comments:

SF NEWS 🌸