SF NEWS | 11:04 PM |
Lanka News
அமைச்சர்கள் மீதான நடவடிக்கையில் விக்னேஷ்வரன் உறுதி; மாற்றம் தேவையென சம்பந்தன் கடிதம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சிலர் வட
மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுடன் இன்று மாலை முக்கிய சந்திப்பில்
ஈடுபட்டனர்.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத அமைச்சர்கள் தொடர்பில் தமது
நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என வடமாகாண முதலமைச்சர்
சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
நேற்று (16) மாலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறினார்.
எவ்வாறாயினும், குற்றம் நிரூபிக்கப்படாத அமைச்சர்களுக்கு எதிரான தண்டனை
நடவடிக்கையில் மாற்றம் தேவையென முதல்வருக்கு எதிர்க்கட்சித் தலைவர்
இரா.சம்பந்தன் கடிதம் எழுதியுள்ளார்.
குற்றவாளிகளாகக் காணப்படாத அமைச்சர்கள் தொடர்பில் தேவையான திருத்த நடவடிக்கைகளை எடுக்குமாறு அக்கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த திருத்த நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள விசாரணைகளுக்கு எவ்வித தடையையும் ஏற்படுத்தாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி முதலமைச்சர் விக்னேஷ்வரன் அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் நேற்று (16) இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
குற்றவாளிகளாகக் காணப்படாத அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால், குறித்த இரண்டு அமைச்சர்களாலும் ஏனைய மாகாண சபை உறுப்பினர்களாலும் எதிர்க்கப்படக்கூடும் என்பதை கடந்த 13 ஆம் திகதி சுட்டிக்காட்டியிருந்ததாக இரா.சம்பந்தன் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளின் தலைவர்களோடு இந்த விடயம் தொடர்பில் பேசப்பட்டிருந்த போதிலும், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுடன் கலந்துரையாடப்படாமை குறித்து கரிசனை வெளியிட்டிருந்ததையும் இரா.சம்பந்தன் நினைவுகூர்ந்துள்ளார்.
அதன் பின்னர் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுடன் முதலமைச்சர் உரையாடியபோது, அவரும் குற்றவாளிகளாகக் காணப்படாத அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதை தெரியப்படுத்தியிருந்ததாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
14 ஆம் திகதி குற்றவாளிகளாகக் காணப்படாத இரு அமைச்சர்களு எதிராகவும் தண்டனை நடவடிக்கை அறிவிக்கப்பட்டதன் விளைவாகவே, சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசியமற்ற நடவடிக்கைகள் ஒற்றுமையின்மையை ஊக்குவிப்பதாகவும் வடமாகாண சபையின் நடவடிக்கைகளை பாதிப்பதாகவும் அமைந்துவிடக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவரின் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, முதலமைச்சருடைய ஒரு குறிப்பிட்ட செயலைத் தண்டிப்பதற்காகவும்
அந்த செயலை மாற்றியமைப்பதற்காகவும் எடுக்கப்பட்டிருக்கின்ற நடவடிக்கையே இது
எனவும் அதை மக்கள் புரிந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை நிறுத்த வேண்டும் எனவும்
எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் வேண்டுகோள் விடுத்தார்.
வட மாகாண சபையில் நிலவும் சர்ச்சை தொடர்பில் இரா. சம்பந்தனிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதேவேளை, நிரபராதிகளாக இருந்தாலும் கட்டாய விடுமுறையில் செல்ல வேண்டும்
என்ற தண்டனையை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக வட மாகாண சுகாதார
அமைச்சர் ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டார்.
வவுனியாவில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை அவர் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில், வட மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா
தீர்மானத்தில் கையெழுத்திட்ட மாகாண சபை உறுப்பினர் ஜயதிலக்கவிற்கு அமைச்சர்
பதவி வழங்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை
உறுப்பினர் விந்தன் கனகரட்னம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதேவேளை, அடுத்த வட மாகாண முதலமைச்சர் பதவிக்கு அவை முதல்வர் சி.வி.கே.
சிவஞானம் பெரும்பான்மை உறுப்பினர்களால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாகவும்,
சத்தியலிங்கத்தின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் வட மாகாண சபை
உறுப்பினர் கேசவன் சயந்தன் குறிப்பிட்டார்
இந்நிலையில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுக்கு ஆதரவு
தெரிவித்து இன்று (17) முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.
மாவட்டத்தின் பொது அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
வட மாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், அ.புவனேஸ்வரன், கே. சிவநேசன் ஆகியோரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, பொது அமைப்புகள் சார்பில் மூன்று மாகாண சபை உறுப்பினர்களிடம் மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீளப் பெறப்பட்டால் மாத்திரமே மக்களின் கொந்தளிப்பைத் தடுக்க முடியும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரை நேற்று (16) மாலை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே முதலமைச்சர் இதனைக் கூறினார்.
இதேவேளை, முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்
மக்கள் வட மாகாண முதல்வருடன் உள்ளதாகவும் தானும் அவருடன் இருப்பதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன், மாகாண அமைச்சர்கள் தொடர்பில்
மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற
உறுப்பினர்கள் கொண்டுள்ள நிலைப்பாடு என்னவென சில பாராளுமன்ற
உறுப்பினர்களிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.
நேற்று (16) மாலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறினார்.
குற்றவாளிகளாகக் காணப்படாத அமைச்சர்கள் தொடர்பில் தேவையான திருத்த நடவடிக்கைகளை எடுக்குமாறு அக்கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த திருத்த நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள விசாரணைகளுக்கு எவ்வித தடையையும் ஏற்படுத்தாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி முதலமைச்சர் விக்னேஷ்வரன் அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் நேற்று (16) இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
குற்றவாளிகளாகக் காணப்படாத அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால், குறித்த இரண்டு அமைச்சர்களாலும் ஏனைய மாகாண சபை உறுப்பினர்களாலும் எதிர்க்கப்படக்கூடும் என்பதை கடந்த 13 ஆம் திகதி சுட்டிக்காட்டியிருந்ததாக இரா.சம்பந்தன் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளின் தலைவர்களோடு இந்த விடயம் தொடர்பில் பேசப்பட்டிருந்த போதிலும், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுடன் கலந்துரையாடப்படாமை குறித்து கரிசனை வெளியிட்டிருந்ததையும் இரா.சம்பந்தன் நினைவுகூர்ந்துள்ளார்.
அதன் பின்னர் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுடன் முதலமைச்சர் உரையாடியபோது, அவரும் குற்றவாளிகளாகக் காணப்படாத அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதை தெரியப்படுத்தியிருந்ததாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
14 ஆம் திகதி குற்றவாளிகளாகக் காணப்படாத இரு அமைச்சர்களு எதிராகவும் தண்டனை நடவடிக்கை அறிவிக்கப்பட்டதன் விளைவாகவே, சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசியமற்ற நடவடிக்கைகள் ஒற்றுமையின்மையை ஊக்குவிப்பதாகவும் வடமாகாண சபையின் நடவடிக்கைகளை பாதிப்பதாகவும் அமைந்துவிடக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவரின் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட மாகாண சபையில் நிலவும் சர்ச்சை தொடர்பில் இரா. சம்பந்தனிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வவுனியாவில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை அவர் ஏற்பாடு செய்திருந்தார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.
மாவட்டத்தின் பொது அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
வட மாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், அ.புவனேஸ்வரன், கே. சிவநேசன் ஆகியோரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, பொது அமைப்புகள் சார்பில் மூன்று மாகாண சபை உறுப்பினர்களிடம் மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீளப் பெறப்பட்டால் மாத்திரமே மக்களின் கொந்தளிப்பைத் தடுக்க முடியும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரை நேற்று (16) மாலை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே முதலமைச்சர் இதனைக் கூறினார்.
அமைச்சர்கள் மீதான நடவடிக்கையில் விக்னேஷ்வரன் உறுதி; மாற்றம் தேவையென சம்பந்தன் கடிதம்
Reviewed by SF NEWS
on
11:04 PM
Rating:
Reviewed by SF NEWS
on
11:04 PM
Rating:

No comments:
SF NEWS 🌸