👉 உங்களுக்கென சொந்தமாக ஓர் இணையத்தளம் வேண்டுமா ! முதன் முறையாக LKR_4500/= இருந்து ... ( மற்றும் உங்கள் வசதிக்கேற்றவாறு மிக குறைந்த விலையில் செய்து தர நாங்கள் தயாராக உள்ளோம் உடன் தொடர்புகளுக்கு ... +94 77 82 92 016 🌸🌸🌸.....
SF NEWS | 10:54 PM |

மதுக்கடைக்குள் நுழைந்த மயிலால் 500 அமெரிக்க டொலர்கள் நட்டம் (Video)

அமெரிக்காவில் மதுக்கடைக்குள் நுழைந்த மயில் ஒன்று அங்கிருந்த மது போத்தல்களை உடைத்து, கடைக்காரருக்கு நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தென்மேற்கு மாநிலமான லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து 13 மைல் தொலைவில் அர்காடியா எனும் நகரம் உள்ளது.
சான் கேப்ரியல் மலைத்தொடரின் அடிவாரப் பிரதேசமான அர்காடியாவில் வண்ணமிகு மயில்கள் உள்ளிட்ட பல்வேறு பறவைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
இதனால், இப்பகுதியில் பறவை வேட்டையில் ஈடுபடுபவர்களுக்கு சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், அர்காடியாவின் அருகில் உள்ள நகரமான சான் பெர்னார்டினோவில் மயிலொன்று மதுக்கடைக்குள் நுழைந்து விட்டது.
மதுக்கடை உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, மயிலைப் பிடிக்க விலங்குகள் பாதுகாப்பு அதிகாரிகள் கையில் வலையுடன் கடைக்குள் நுழைந்தனர்.
அதிகாரிகளின் வலையில் சிக்காமல், மதுக்கூடத்தில் அங்குமிங்கும் ஓடித்திரிந்த மயிலால் மதுப்போத்தல்கள் பல உடைந்தன.
இறுதியில் ஒரு வழியாக மயிலை வலையில் சிக்க வைத்த அதிகாரிகள் அதனை வெளியே எடுத்துச் சென்றனர்.
90 நிமிடங்கள் வரை அதிகாரிகளை மயில் பாடாய்ப்படுத்தியுள்ளது.
சேதமடைந்த மதுப்போத்தல்களின் விலை மட்டும் 500 அமெரிக்க டொலர்கள் என மதுக்கடை உரிமையாளர் கவலை வெளியிட்டுள்ளார்.
மதுக்கடைக்குள் நுழைந்த மயிலால் 500 அமெரிக்க டொலர்கள் நட்டம் (Video) மதுக்கடைக்குள் நுழைந்த மயிலால் 500 அமெரிக்க டொலர்கள் நட்டம் (Video) Reviewed by SF NEWS on 10:54 PM Rating: 5

No comments:

SF NEWS 🌸