ஊடகவியலாளர் மெல் குணசேகரவின் கொலை வழக்கில் குற்றவாளியாக
காணப்பட்டவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை
விதித்துள்ளது.
இந்த வழக்கின் குற்றவாளிக்கு மரண தண்டனைக்கு மேலதிகமாக 30 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி மீதான மூன்று குற்றச்செயல்களும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது
2014 பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி பத்தரமுல்லை சுபோதிபுர பகுதியிலுள்ள வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, ஊடகவியலாளர் மெல் குணசேகரவை கூரிய ஆயுதங்களால் குத்தி கொலை செய்து அவரிடமிருந்த 1700 ரூபா பணத்தையும் கையடக்கத் தொலைபேசியையும் அபகரித்துச் சென்றதாக இவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை
Reviewed by SF NEWS
on
12:05 AM
Rating:
Reviewed by SF NEWS
on
12:05 AM
Rating:

No comments:
SF NEWS 🌸