👉 உங்களுக்கென சொந்தமாக ஓர் இணையத்தளம் வேண்டுமா ! முதன் முறையாக LKR_4500/= இருந்து ... ( மற்றும் உங்கள் வசதிக்கேற்றவாறு மிக குறைந்த விலையில் செய்து தர நாங்கள் தயாராக உள்ளோம் உடன் தொடர்புகளுக்கு ... +94 77 82 92 016 🌸🌸🌸.....
SF NEWS | 1:58 AM |

கம்பளை சிறுவனின் கடத்தலைத் திட்டமிட்டது யாரென தெரியவந்துள்ளது

கம்பளையில் கடத்தப்பட்ட இரண்டரை வயதான மொஹமட் சல்மான், பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கண்டுபிடிக்கப்பட்டு இன்று பிற்பகல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
மட்டக்களப்பு – கரடியனாறு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முற்பகல் சிறுவனை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
சிறுவனுடன் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட உறவுமுறை இளைஞர் இந்த கடத்தலைத் திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கம்பளையைச் சேர்ந்த மொஹமட் சல்மான் என்ற சிறுவனும் அவனுடைய மாமாவான 25 வயதான மொஹமட் அஸாமும் கடந்த புதன்கிழமை (03) காணாமற்போயிருந்தனர்.
வீட்டருகிலுள்ள தனது தந்தையின் கடைக்கு மதிய உணவை எடுத்துச்செல்லும் போது இவர்கள் இருவரும் காணாமற்போனதுடன், உறவினர்களுக்கு வந்த தொலைபேசி அழைப்பின் பின்னர் இது கடத்தல் என தெரியவந்தது.
கடத்தப்பட்ட தினம் தொலைபேசி அழைப்பில் தொடர்பு கொண்ட நபர் 30 இலட்சம் ரூபா கப்பம் கோரியிருந்தார்.
பின்னர் கப்பத்தொகை 10 இலட்சமாகக் குறைக்கப்பட்டது.
சம்பவம் இடம்பெற்ற தினத்தில் சில பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், சிறுவனுடன் இருந்த இளைஞர் நேற்று பிற்பகல் கண்டியில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இரண்டரை வயதான சிறுவன் மட்டக்களப்பு – கரடியனாறு பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.
அந்த இளைஞர் மற்றுமொரு குழுவின் ஒத்துழைப்புடன் சிறுவனைக் கடத்திச்சென்று கப்பம் கோரியுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவன் மறைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டின் பெண் ஒருவரும் அவரது மகளும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


கம்பளை சிறுவனின் கடத்தலைத் திட்டமிட்டது யாரென தெரியவந்துள்ளது கம்பளை சிறுவனின் கடத்தலைத் திட்டமிட்டது யாரென தெரியவந்துள்ளது Reviewed by SF NEWS on 1:58 AM Rating: 5

No comments:

SF NEWS 🌸