கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு முதல் மூன்று மாதங்களில்
குறைவான போன்களையே அப்பிள் நிறுவனம் விற்பனை செய்துள்ளதாக அதன் சமீபத்திய
முடிவுகளில் தெரிவித்துள்ளது.
கலிஃபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் இந்த ஆண்டில் புதிய ஐஃபோன் மொடல் ஒன்றை வெளியிடவுள்ளது.
மூன்று மாதத்தில் 50.8 மில்லியன் ஐஃபோன்களை விற்பனை செய்தததாகவும், அது கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது 1% குறைவானது என்றும் அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஐ ஃபோனுக்காக வாடிக்கையாளர்கள் காத்திருப்பதால் அந்த காத்திருப்பு நேரத்தை காரணமாக சுட்டிக்காட்டினார் அப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக்.
சிறந்த முடிவுகளை எதிர்ப்பார்த்து காத்திருந்த நிலையில் அப்பிள் நிறுவனத்தின் பங்குகள் முன்னர் ஓர் உச்சத்தை தொட்ட நிலையில், வர்த்தகம் தொடங்கிய சிலமணி நேரங்கள் கழித்து பங்குகளின் விலை சுமார் 2 சதவீதம் சரிந்தன.
வல்லுநர்கள் கணித்திருந்த வருவாயைக் காட்டிலும் சற்று குறைவாக 4.6 சதவீத உயர்வுடன் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 52.9 பில்லியன் டொலர்களை வருவாயாக காட்டியது.
அப்பிள் பே, ஐகிளவுட் மற்றும் ஐஃபோன் அப் ஸ்டோர் உள்ளிட்ட சேவைகளால் ஐஃபோன் விற்பனையில் சரிவு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

அப்பிள் ஐபோன் விற்பனையில் சரிவு
Reviewed by SF NEWS
on
1:44 PM
Rating:
Reviewed by SF NEWS
on
1:44 PM
Rating:

No comments:
SF NEWS 🌸