👉 உங்களுக்கென சொந்தமாக ஓர் இணையத்தளம் வேண்டுமா ! முதன் முறையாக LKR_4500/= இருந்து ... ( மற்றும் உங்கள் வசதிக்கேற்றவாறு மிக குறைந்த விலையில் செய்து தர நாங்கள் தயாராக உள்ளோம் உடன் தொடர்புகளுக்கு ... +94 77 82 92 016 🌸🌸🌸.....
SF NEWS | 1:40 PM |

வவுனியாவில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை

வவுனியா – நேரியக்குளம் பகுதியில் சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றவாளிக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சந்தேகநபருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, 15 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 1000 ரூபா அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கர்ப்பமாக்கியதாக சந்தேகநபருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த சிறுமியின் 45 வயதான உறவினர் ஒருவர் மீதே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
இன்றைய விசாரணையின் போது அரச தரப்பில் சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரனும், பிரதிவாதி சார்பில் சட்டத்தரணி காரியவசமும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.


வவுனியாவில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை வவுனியாவில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை Reviewed by SF NEWS on 1:40 PM Rating: 5

No comments:

SF NEWS 🌸