👉 உங்களுக்கென சொந்தமாக ஓர் இணையத்தளம் வேண்டுமா ! முதன் முறையாக LKR_4500/= இருந்து ... ( மற்றும் உங்கள் வசதிக்கேற்றவாறு மிக குறைந்த விலையில் செய்து தர நாங்கள் தயாராக உள்ளோம் உடன் தொடர்புகளுக்கு ... +94 77 82 92 016 🌸🌸🌸.....
SF NEWS | 4:23 AM |

அடித்தல் திருத்தல் இன்றி எழுதுங்கள் தேர்வில் அசத்துங்கள்!

பொதுத் தேர்வு டிப்ஸ்
பயமும் பதற்றமும் நெஞ்சைக் கவ்வும். தேர்வை நினைத்தாலே அச்சம் சூழும். படித்தது எல்லாமே மறந்துபோனதைப்போலத் தோன்றும். இதயம் எகிறித் துடிக்கும். 10ம் வகுப்பு, +2 பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களின் இயல்பு வாழ்க்கையே மாறிவிடும். உண்மையில் இப்படியொரு அச்சமும், குழப்பமும் தேவையேயில்லை.

கடந்த ஓராண்டில் நீங்கள் எதைப் படித்தீர்களோ, அதைத்தான் எழுதப் போகிறீர்கள்...! இவற்றில் இருந்துதான் கேள்விகள் என்று முடிவான பிறகு எதற்குக் குழப்பம்..? திட்டமிட்ட உழைப்பு, கூடுதல் கவனம், நிதானம்... போதும்..! நிச்சயம் சாதிக்கலாம். பொதுத்தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ள, பட்டதாரி ஆசிரியர்கள் அருணா, லோகநாதன் ஆகியோர் தரும் சூப்பர் டிப்ஸ்...

* தேர்வு எழுதுவதற்கு உகந்த நிலையில் உங்கள் உடலையும் மனதையும் தயார் செய்வது அவசியம். தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்பிருந்தே சில விரதங்களைக் கடைப்பிடிக்கவேண்டும். வெளியிடங்களில் சாப்பிடாதீர்கள். வீட்டு உணவை மட்டுமே, சூடாக எடுத்துக்கொள்ளுங்கள். உடம்புக்கு ஒத்துக்கொள்ளாத எந்த உணவையும் தொடாதீர்கள். அசைவ உணவைக் கூட தவிர்க்கலாம். நிறைய தண்ணீர் குடியுங்கள். ஸ்னாக்ஸை குறைத்துக்கொள்ளுங்கள்.

* குறைந்தது 6 மணிநேரம் தூக்கம் அவசியம். இடையிடையே பழச்சாறுகள் எடுத்துக்கொள்ளுங்கள். சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருங்கள். எதற்காகவும் பதற்றப்படாதீர்கள். படித்து மனதில் சேமித்து வைத்திருக்கும் விஷயங்களை எல்லாம் பயமும் பதற்றமும் அழித்துவிடும்.

* தேர்வு நாட்களில் உணவைத் தவிர்க்காதீர்கள். காலை உணவு கட்டாயம் தேவை. முதல் நாள் இரவே தேர்வுக்கு என்னென்ன கொண்டுசெல்ல வேண்டும் என்பதைப் பட்டியலிட்டுத் தயாராக எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.

* அரைமணிநேரத்துக்கு முன்பாகவே தேர்வு நடக்கும் இடத்துக்குச் சென்றுவிடுங்கள். போக்குவரத்து நெருக்கடி போன்ற காரணங்களால் கடைசி நேரத்தில் டென்ஷன் ஆகலாம். முன்கூட்டியே கிளம்பிவிட்டால் பிரச்னையில்லை. நீங்கள் அமரும் இடத்தையும் முன்கூட்டியே தெரிந்துகொண்டால் பதற்றம் இல்லாமல் இருக்கலாம். வீட்டில் இருந்து கிளம்பும் முன்பு, தேவையான பொருட்கள் எல்லாம் கையில் உள்ளதா என்பதைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

* தேர்வு நாளன்று புத்தகத்தைப் புரட்டத் தேவையில்லை. படிக்கும்போது தயாரித்த குறிப்பை மட்டும் புரட்டிப்பார்த்து முக்கியமானவற்றை நினைவுக்குக் கொண்டுவந்தால் போதும். புதிய விஷயத்தைப் படிக்கவேண்டாம். அது குழப்பத்தை ஏற்படுத்தும்.

* தேர்வுத்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகளை முறையாகக் கடைப்பிடிக்கவேண்டும்.

* தேர்வறையில் துண்டுச்சீட்டு வைத்து பார்த்து எழுதுதல், விடைத்தாள் மாற்றிக்கொள்வது போன்றவை கடுமையான குற்றங் களாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும்போது ஓழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்கள்மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன் 2 முதல் 5 ஆண்டுகள் வரை தேர்வு எழுதவும் தடை விதிக்கப்படும் என்பதை மறக்காதீர்கள்.

* தேர்வு நேரத்துக்கு முன்பாகவே உங்களுக்கான இடத்தில் அமர்ந்துவிட வேண்டும். ‘பார்கோடிங்’இடப்பட்ட முகப்புத் தாளில், அழகாக, அடித்தல், திருத்தல் இல்லாமல் உங்கள் விவரங்களைப் பூர்த்தி செய்யுங்கள். அதற்கு 5 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. உங்கள் தேர்வு எண்ணைக் கவனமாக எழுதுங்கள். உரிய இடத்தில் கையெழுத்தைப் போடுங்கள்.

* கேள்வித்தாளை வாங்கியவுடன் படபடவென்று விடையை எழுதாதீர்கள். கேள்வித் தாளைப் படிக்க 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. முழுமையாகப் படித்து, தெரிந்த மற்றும் தெரியாத கேள்விகளை மனதுக்குள் டிக் செய்துகொள்ளலாம்.

நன்கு தெரிந்த கேள்விகளை முதலில் எழுதவேண்டும். மதிப்பெண் அடிப்படையில், ஒவ்வொரு பிரிவு கேள்விகளுக்கும் எவ்வளவு நேரம் ஒதுக் கலாம் எனத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள். குறிப்பிட்ட நேரத்துக்குள் எழுதி முடிக்க முயற்சிக்கவேண்டும்.

* விடைத்தாளில் ஒரு பக்கத்தில் 20 முதல் 25 வரிகள் மட்டுமே எழுதவேண்டும். இரண்டு பக்கங்களிலும் எழுதவேண்டும். செய்முறை அல்லது மதிப்பீடுகள் அனைத்தும் விடைத்தாளில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில்தான் எழுதவேண்டும். வினா எண்ணைக் கண்டிப்பாகக் குறிப்பிடவேண்டும்.

* முதலில் ‘அ’பிரிவில் ஒரு கேள்விக்குப் பதில் எழுதுகிறீர்கள். அடுத்து ‘ஆ’பிரிவில் ஒரு கேள்வி. அடித்து மீண்டும் ‘அ’பிரிவில் ஒரு கேள்வி... என்று மாற்றி மாற்றி எழுதுவது நல்லதல்ல. ‘அ’பிரிவில் உங்களுக்கு எத்தனை கேள்விகளுக்கு விடை தெரியுமோ அதை எழுதி நிறைவு செய்துவிட்டு அதன்பிறகு ‘ஆ’பிரிவுக்கு வருவதுதான் நல்ல அணுகுமுறை.

* இரண்டு பதில்களுக்கு இடையில் இடைவெளி விடவேண்டும். அடித்தல், திருத்தல் இன்றி கையெழுத்து தெளிவாக இருக்கவேண்டும். விடைத்தாளில் விடை எழுதாத பக்கங்களில் குறுக்குக்கோடு இடவேண்டும்.

* அறிவியல், கணக்கு, வணிகக் கணிதம், கணக்குப் பதிவியல் தேர்வு எழுதும் மாணவர்கள் ஸ்கெட்ச் பேனா, கலர் பென்சில் பயன்படுத்தக்கூடாது. சிவப்பு மை கண்டிப்பாகக் கூடாது.

* வினாத்தாள் கடினமாக இருப்பது போலத் தோன்றினாலோ, பாடப் பகுதியில் இல்லாத வினாக்கள் போலத் தோன்றினாலோ பதற்றப்படாதீர்கள். தேவையற்ற பதற்றத்தால் தெரிந்த வினாக்களைக்கூட எழுதமுடியாத நிலை ஏற்படும்.

கணிதத்தில் கேள்வி எண் 30 மற்றும் 45 (5 மதிப்பெண்) கட்டாய வினா என்பதால் அதனைக் கண்டிப்பாக எழுதவேண்டும். எழுதமுடியாதபட்சத்தில் 100 மதிப்பெண் வாய்ப்பை மாணவர்கள் இழக்க நேரிடும். கட்டாய வினா பாடத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் கேட்கப்படலாம்.

* கணிதத்தில் வரைபடங்கள் மற்றும் செய்முறை வடிவியல் பகுதியில் உதவிப் படம்வரைதல், அளவுகளைச் சரியாகக் குறித்தல், அளவுத் திட்டம் எழுதுதல், அட்டவணை அமைத்தல், புள்ளிகளைச் சரியாகக் குறித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும். வரைபடத்திலும் வினாவின் எண்ணை எழுதவேண்டும். எழுதிமுடித்துவிட்டு அனைத்து வினாக்களுக்கும் விடை எழுதப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்க்கவேண்டியது அவசியம்.

* அறிவியல் பாடத்தைப் பொறுத்தவரை முக்கிய குறிப்புகளை பென்சிலால் அடிக்கோடிடலாம். அல்லது கறுப்பு ஸ்டிக் பேனாவால் எழுதலாம். ஒரு மதிப்பெண் வினாக்கள் 15க்கும் ஒன்றாக விடையளிக்கவேண்டும். தனித்தனியாகப் பிரித்து எழுதக்கூடாது.
...SF NEWS...
அடித்தல் திருத்தல் இன்றி எழுதுங்கள் தேர்வில் அசத்துங்கள்! அடித்தல் திருத்தல் இன்றி எழுதுங்கள் தேர்வில் அசத்துங்கள்! Reviewed by SF NEWS on 4:23 AM Rating: 5

No comments:

SF NEWS 🌸